
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் பிரகாரத்தில் உள்ளூர் நபர்கள் செருப்புகளுடன் செல்வது வழக்கமாகி வருகிறது. கோயிலுக்குள் செல்பவர்கள் செருப்புகளை வெளியில் விட்டு செல்வதற்கு கோயில் சார்பில் சன்னதி தெரு தங்கும் வளாகத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.இங்கு செருப்புகளை விட்டு செல்ல கட்டணம் ஏதும் வாங்கக்கூடாது. ஆனால் பணியில் இருப்பவர்கள் கட்டணம் வசூல் செய்கின்றனர். இருந்தாலும் பக்தர்கள் இதை பெரிதாக எடுத்து கொள்வதில்லை. கேட்கின்ற தொகையை கொடுத்து விட்டு செருப்புகளை பாதுகாப்பாக விட்டு செல்கின்றனர்.
ஆனால் கோயிலுக்குள் சென்று திரும்பி வரும் பலரது செருப்புகள் காணாமல் போய்விடுகின்றன. இதனால் உள்ளூர் காரர்கள் பலர் தங்களது செருப்புகளை கூடை,பையில் எடுத்து செல்வது, கைகளில் எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது போல் மீன், காய்கறிகளுடன் பலரும் மூன்றாம் பிரகாரத்தின் வழியாக செல்வதும் தொடர்கிறது. நேற்று காலையில் காலில் செருப்புகளை அணிந்தபடியே இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மூன்றாம் பிரகாரத்தின் வழியே சென்றனர். இதைபார்த்த பக்தர்கள் சிலர் செருப்பை கழற்ற சொல்லவே கழற்றி கைகளில் எடுத்து சென்றனர். பிரகார பணியில் இருக்கும் ஊழியர்கள் இதை தடுக்க முயற்சிக்க வேண்டும். ருவறை மட்டுமே அல் லாது கோயிலின் அனைத்துப்பகுதிகளும் வணங்குவதற்குரிய இடம்தான் என்பதை பக்தர்களும், பொதுமக்களும் உணர்ந்தால்தான் இதுபோன்றவைகளை தவிர்க்கமுடியும். கோயில் நிர்வாகமும் இதுபோன்ற செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment