Pages

Sunday, December 20, 2009

நேபாளத்தில் கலவரம்


நேபாளத்தில் ஜனாதிபதியை எதிர்த்து மாவோயிஸ்ட்கள் மூன்று நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.நேபாளத்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பின், ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் மாவோயிஸ்ட் தலைவர் பிரசாந்தா பிரதமரானார்.மாவோயிஸ்ட்களை ராணுவத்தில் சேர்க்கும் படி பிரசாந்தா தலைமையிலான அமைச்சரவை கூறியதை ராணுவத் தளபதி ஏற்க மறுத்து விட்டார்.இதையடுத்து ராணுவத் தளபதியை, பதவி நீக்கம் செய்தது பிரசாந்தா அரசு. ஆனால், ஜனாதிபதி ராம் பரண் யாதவ், "ராணுவ தளபதியை பதவி நீக்கம் செய்தது செல்லாது" என, அறிவித்தார். இதனால், ஜனாதிபதிக்கும், பிரசாந்தாவுக்கும் மோதல் ஏற்பட்டது.


பிரசாந்தா தலைமையிலான அரசு பதவி விலகியது. தற்போது கம்யூனிஸ்ட் தலைவர் மாதவ் குமார் நேபாள் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடக்கிறது.மன்னர் ஆட்சி ஒழிந்த பின்பும் மக்களாட்சி நடைபெறவில்லை; மக்களுக்கு சாதகமான ஆட்சி நடத்திய மாவோயிஸ்ட்களை கட்டாயமாக ஆட்சியிலிருந்து வெளியேற்றியதாக கூறி, மூன்று நாள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர் மாவோயிஸ்ட்கள்.நேற்று துவங்கிய வேலை நிறுத்தத்தின் போது, தலைநகர் காத்மாண்டுவில் ஏராளமான கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. சில வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இது தொடர்பாக, 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அமைதியான வேலை நிறுத்தத்துக்கு தான் அழைப்பு விடுத்துள்ளதாக மாவோயிஸ்ட் தலைவர் பிரசாந்தா தெரிவித்துள்ளார்.மூன்று நாள் வேலை நிறுத்தத்தின் காரணமாக, வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment