Pages

Sunday, December 20, 2009

இலவச லட்டு திருப்தியில் ரத்து

தெலங்கானா மாநில பிரச்னையால் ஆந்திராவில் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களால் திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் வருமானம் குறைந்து விட்டது.திருமலை அன்னமய்யா பவனில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஆதிகேசவலு நாயுடு "ஆந்திராவில் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வரும் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது. இதனால், உண்டியல் வருமானமும் அதிகளவில் குறைந்து விட்டது. இலவச தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு திருமலை, திருப்பதி தேவஸ்தானம் இலவசமாக லட்டு வழங்குவது ஜனவரி 1ம் தேதி முதல் ரத்து செய்யப்படும். ஜனவரி 1ம் தேதி முதல் பக்தர் ஒருவருக்கு 2 லட்டுகள் மட்டுமே வழங்கப்படும். ஒரு லட்டின் விலை ரூ.10. திருமலையில் புதிய திருமண மண்டபம் கட்டப்பட உள்ளது. மேலும், பாதுகாப்பு அதிகரிக்கும் வகையில் ரூ.30 லட்சம் மதிப்பில் 20 மெட்டல் டிடெக்டர் பொருத்தப்படும். வைகுண்ட ஏகாதசி, புத்தாண்டு பிறப்பை முன்னிட்ட திருமலைக்கு வரும் வி.ஐ.பி.க்களுக்கு டிக்கெட்டுகளை குறைந்தளவில் கொடுக்க புதிய கமிட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது"இவ்வாறு ஆதிகேசவலு கூறினார்.

No comments:

Post a Comment