கடந்த ஆண்டு மும்பைத் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு பாகிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தையை இந்தியா துண்டித்துக் கொண்டது.இதனால், கோபமடைந்துள்ள பாகிஸ்தான், இந்திய பொருட்களை தங்கள் எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்குகொண்டு செல்லக்கூடாது, என, ஆப்கனுடனான நடந்த பேச்சுவார்த்தையின் போது தெரிவித்துள்ளது. "பாகிஸ்தானின் இந்த செயல் எரிச்சலை கிளப்புவதாகவும், இருப்பினும் பாகிஸ்தான் -ஆப்கன் பேச்சுவார்த்தை இதனால் பாதிக்கப்படாது, என, ஆப்கானிஸ்தான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்தியாவுடனான பேச்சுவார்த்தையின் போது, ஆப்கானிஸ்தானுக்கு பொருட்களை கொண்டு செல்வது குறித்து விவாதிக்கப்படும்"என பாகிஸ்தான் அதிகாரி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment