Pages

Monday, December 7, 2009

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான: லண்டன் ஓட்டல் வழக்கை வாபஸ் பெற தமிழக அரசுக்கு அனுமதி

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி, தினகரன் ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு மற்றும் ஜெயலலிதா, தினகரன் மீதான லண்டன் ஓட்டல் வழக்கு ஆகியவை பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த இரண்டு வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க தனிக்கோர்ட்டு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதை தொடர்ந்து இந்த வழக்குகளை விசாரிக்க தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் திடீரென லண்டன் ஓட்டல் வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், லண்டன் ஓட்டல் வழக்கை வாபஸ் பெற அனுமதி அளித்தும், இது தொடர்பாக பெங்களூர் தனிக்கோர்ட்டு பரிசீலிக்க வேண்டும் என்றும் தங்களது உத்தரவில் கூறி இருந்தனர்.

இந்த நிலையில் லண்டன் ஓட்டல் வழக்கை வாபஸ் பெறுவதாக கூறி கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி பெங்களூர் தனிக்கோர்ட்டில் அரசு வக்கீல் ஆச்சார்யா மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயலலிதா மீதான லண்டன் ஓட்டல் வழக்கு வாபஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து அரசு வக்கீல் ஆச்சார்யா, ஐகோர்ட்டில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று ஐகோர்ட்டில் நீதிபதி ஜாவித்ரகீம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆச்சார்யாவும், ஜெயலலிதா சார்பில் வக்கீல் நவநீதகிருஷ்ணனும் ஆஜரானார்கள்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜாவித்ரகீம், ஜெயலலிதா மீதான லண்டன் ஓட்டல் வழக்கை நடத்துவதற்கு போதுமான ஆவணங்கள் இல்லை என்று கூறி இந்த வழக்கை வாபஸ் பெற அனுமதித்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment