Pages

Monday, December 7, 2009

முதல்-மந்திரி ரோசய்யா - ராகுல் காந்தி ரகசிய சந்திப்பு ?

ஆந்திர முதல்-மந்திரி ரோசய்யா டெல்லி சென்றுள்ளார். நேற்று அவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச நேரம் ஒதுக்குமாறு அனுமதி கேட்டிருந்தார்.டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் ரோசய்யா தங்கி இருந்தார். ராகுல் காந்தியிடம் இருந்து பதில் வந்ததும் புறப்பட்டுச் செல்லலாம் என்று அவர் காத்திருந்தார்.

இந்த நிலையில் அவரது அறைக்கதவு தட்டப்பட்டது. உடனே ரோசய்யா கதவைத் திறந்தார்.

வாசலில் ராகுல்காந்தி சிரித்தப்படி நின்று கொண்டிருப்பதை பார்த்ததும் ஆச்சரியம் அடைந்தார்.

ரோசய்யாவும் ராகுல்காந்தியும் அந்த அறையில் சுமார் 10 நிமிடம் தனிமையில் பேசினார்கள். பிறகு ராகுல் காந்தி விடை பெற்று புறப்பட்டு சென்றார். ராகுல் காந்தியின் இந்த திடீர் சந்திப்பு ஆந்திர அதிகாரிகளுக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

ஆந்திர பவனில் நடந்த அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் பங்கேற்றார். ராகுலுடன் சந்தித்தது பற்றி ரோசய்யா கூறுகையில், நாங்கள் அரசியல் பேசவில்லை. வெறும் சம்பிரதாய சந்திப்பு என்றார்.

No comments:

Post a Comment