Pages

Monday, December 7, 2009

ஒசமா பின்லாடனை பிடிக்க, விரைவில் சிறப்பு அதிரடிப் படையினரின் வேட்டை தொடரும்-அமெரிக்காவின் நாடகம் ?

"உலக நாடுகளால் தேடப்படும் பயங்கரவாதியும், அல் - குவைதா அமைப்பின் தலைவருமான, ஒசமா பின்லாடனை பிடிக்க, விரைவில் சிறப்பு அதிரடிப் படையினரின் வேட்டை தொடரும்,'' என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெனரல் ஜேம்ஸ் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது: அல் - குவைதா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லாடன், ஆப்கன் - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில்தான் உள்ளார். ஆனாலும், அவர் ஒரே இடத்தில் இல்லாமல், ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தான் இடையே மாறி, மாறிச் சென்று கொண்டிருக்கிறார். சில நேரங்களில் பாகிஸ்தானின் வடக்கு வாசீரிஸ்தான் பகுதியில் உள்ளார். ஒசாமாவை பிடிக்க, விரைவில் அமெரிக்க சிறப்பு அதிரடிப் படையினரின் வேட்டை தொடரும். ஒசாமா ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் அல்லது பிடிபட வேண்டும். இவ்வாறு ஜேம்ஸ் ஜோன்ஸ் கூறினார்.
அதேநேரத்தில், ஒசாமா விவகாரம் தொடர்பாக, நேற்றுமுன்தினம் நிருபர்களிடம் பேசிய, அமெரிக்க ராணுவ அமைச்சர் ராபர்ட் கேட்ஸ், "ஒசாமா எங்கிருக்கிறார் என்பது பற்றி தகவல்கள் அமெரிக்க உளவுத் துறையினருக்கு கூட தெரியவில்லை. பல ஆண்டுகளாக அவர்களுக்கு நம்பமான தகவல் கிடைக்கவில்லை' என்றார் என்பது குறிப்பிடத்தது.

No comments:

Post a Comment