நேற்று மதியம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள சிறியசந்தில் இருந்து அருந்தமிழர் விடுதலை இயக்க மாநில துணை அமைப்பாளர் அருண் உள்பட 6 பேர் ஜெயலலிதா உருவபொம்மையை கையில் தூக்கி வந்தனர்.
பின்னர் அந்த உருவபொம்மைக்கு திடீரென்று தீவைத்து நடுரோட்டில் தூக்கி வீசினார்கள். இதைத்தொடர்ந்து அருந்தமிழர் விடுதலை இயக்க மாநில துணை அமைப்பாளர் அருண், மண்டல அமைப்பாளர் வேலாயுதம், மண்டல அமைப்பு செயலாளர் இளவேனில், மாவட்ட செயலாளர் புதியவன், முருகேசன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment