Pages

Friday, December 4, 2009

இலங்கை முகாம்களில் அகதிகள் சித்ரவதை பெயர் எடுப்பு என்கிற பெயரில் ?



"முகாம்களில் தங்கியுள்ள அனைத்து தமிழர்களின் பெயர்களும் முறையாக பதிவு செய்யப்படுகின்றன" என, இலங்கை அமைச்சர் ரோகிதா பொகலகாமா கூறினார்.


இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோகிதா, பிரிட்டன் எம்.பி.,க்களுடன் கலந்துரையாடினார்.


அவர் கூறியதாவது:இலங்கையில் முகாம்களில் வசிக்கும் அனைத்து தமிழர்களின் பெயர்களும் முறையாக பதிவு செய்யப்படுகின்றன. இதன் மூலம் அவர்களுக்கு பல பயன்கள் கிடைக்கும். முகாம்களில் உள்ள தமிழர்களின் உறவினர்கள் பலர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அவர்கள், முகாம்களில் உள்ளவர்களை தொடர்பு கொள்ளவும் அனுமதி அளிக்கப்படும்.பிரிட்டனில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள், தங்களது குறைகளை எம்.பி.,க்களிடம் தெரிவிக்கின்றனர். இலங்கை தூதரகத்தை அணுகி, தங்களது குறைகளைத் தெரிவிக்கும்படி பிரிட்டன் எம்.பி.,க்கள், இவர்களை அறிவுறுத்த வேண்டும். முகாம்களில் தங்கியுள்ள மக்களை மறு குடியமர்த்துவதற்கான நடவடிக்கை வேகமாக நடந்து வருகிறது"இவ்வாறு ரோகிதா கூறினார்.


இதற்கிடையே, இலங்கை மனித உரிமை துறை அமைச்சர் மகிந்தா சமரசிங்கே கூறுகையில், "ஏராளமான தமிழர்கள் இன்னும் முகாம்களில் வசிக்கின்றனர். கிளிநொச்சி, முல்லைத் தீவு உள்ளிட்ட இடங்களில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை முழுமையாக அகற்றும் வரை, அவர்கள் முகாம்களில் தங்கியிருப்பர்" என்றார்.

No comments:

Post a Comment