நான் அபுதாபிக்கு 2004ம் ஆண்டு சென்றேன். அங்கே, "கல்ப் நியூஸ்' என்ற பத்திரிகையில் வந்த செய்தியைப் படித்தேன். இந்தியாவைச் சேர்ந்த முகமது அப்துல் அலிம் பகதூர் என்பவர், இந்தியாவில் இருந்து, "கசகசா' என்கிற உணவுப் பொருளை கொண்டு வந்ததற்காக, எட்டாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருப்பதாக செய்தி வந்தது.
இதே போன்று, 250 கிராம், "கசகசா'வை, ஹஜ் யாத்திரை சென்ற இரு இந்தியர்கள் வைத்திருந்ததாக, அவர்களையும் சவுதி அரேபியாவில் கைது செய்துள்ளனர். இந்திய தூதரகம் தலையிட்டு அவர்களை விடுவித்துள்ளனர். அவர்கள் 56 நாட்கள் சிறையில் இருந்துள்ளனர்.இந்தியாவைப் பொறுத்தவரை, உணவில், "கசகசா'வை சேர்க்கின்றனர். இங்கு சாதாரணமாக பயன்படுத்தி வருகிறோம்; தாராளமாகவும் கிடைக்கிறது.
வெளி நாடுகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் குறித்து தெரியாத நிலையில், இந்தியர்கள் அங்கு கொண்டு செல்லும் போது அவர்களை கைது செய்கின்றனர். அந்த நாட்டின் சட்டம் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.எனவே, வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலை, இந்தியாவில் உள்ள விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் வெளிப்படையாக வைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், சத்யநாராயணன் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பி.ஆர்.பாலசுப்ரமணியன், மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்தரன், மத்திய அரசின் சீனியர் வக்கீல் மகாதேவன் ஆஜராகினர்.
டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:மத்திய கலால் மற்றும் சுங்கத் துறை வாரியம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், மத்திய கிழக்கு நாடுகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் என்ன என்பதை விமான நிலையங்களிலும், துறைமுகங்களி லும் அறிவிப்பு பலகைகளில் வைக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.மேலும், இந்தியாவில் மக்கள் பொதுவாக பயன்படுத்தும் பொருட்கள், அதற்கு மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தடை குறித்தும் விவரங்கள் வெளியிடப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே, இந்த உத்தரவை, அனைத்து மாநிலங்களிலும் உள்ளூர் மொழிகளில் மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை வாரியம் வெளியிட வேண்டும்.இந்தியாவில் "கசகசா', பான் மசாலா பொருட்கள் போன்றவை சகஜமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், மத்திய கிழக்கு நாடுகளில் இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தும் விளம்பரப் படுத்த வேண்டும். வணிக இதழ்களில் இதை வெளியிட்டால், சாதாரண பொது ஜனங்கள் படித்து தெரிந்து கொள்ள வாய்ப்பில்லை.
எனவே, பொதுவாக சுற்றுலாப் பயணிகள் தெரிந்து கொள்வதற்காக, விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் இந்த பட்டியலை வைக்க வேண்டும். மத்திய அரசு உடனடியாகச் செயல்பட்டதற்கு பாராட்டுகிறோம். வெளிநாடுகளில் தடை செய்யப் பட்ட பொருட்கள் குறித்து சாதாரண மக்களுக்கு தெரியாததன் மூலம், அவர்கள் படும் துன்பங்களை கோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு வந்த மனுதாரரையும் பாராட்டுகிறோம். இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment