Friday, December 4, 2009
அஜித்தை நடிப்பில் தூக்கி சாப்பிட்ட சம்பத் வில்லன் ?
அஜீத்தின் அடுத்த படமான அசல் படத்தில் மெயின் வில்லனாக நடிக்கிறார் சம்பத். இந்தப் படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் பழைய நடிகர் சுரேஷும் நடிக்கிறார். பாரிஸ் மற்றும் லண்டனில் கடந்த வாரம் நடந்த அசல் பட ஷூட்டிங்கில் அஜீத்துடன் மோதும் காட்சிகளில் நடித்தார் சம்பத். அசல் படத்தில் நடிப்பது குறித்து சம்பத் கூறுகையில், "அஜீத்தைப் போன்ற ஒரு இனிய மனிதரை, நடிகரை நான் இதுவரை பார்த்ததில்லை. ஒரு வில்லனாக நான் நடிக்கும் போது, தவற விட்ட சில விஷயங்களை அழகாக சொல்லிக் கொடுத்து என்னைத் திருத்தினார். அஜித்துடன் திருப்பதி படத்தில் நான் ஏற்கெனவே நடித்துள்ளேன். ஆனால் அப்போது சில காட்சிகளில்தான் தலை காட்டினேன். இந்தப் படத்தில் எனக்கும் நிறைய காட்சிகள். சந்தோஷமாக உள்ளது" என்றார். படத்தில் இடம்பெறும் அஜீத் - சம்பத் மோதல் காட்சிகள் ஹாலிவுட் ரேஞ்சுக்கு வந்திருப்பதாக சொல்லி மகிழ்கிறார் சம்பத்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment