Pages

Friday, December 18, 2009

மாணவிகளிடம் சில்மிஷம் செய்த பள்ளி தலைமை ஆசிரியர்


சங்கராபுரம் அருகே பள்ளி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியம் அத்தியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகண்டை கூட்ரோட்டைச்சேர்ந்த அந்தோணி (45) தலைமையாசிரியராக பணிபுரிகிறார்.கடந்த 14ம் தேதி மதிய உணவு இடைவேளையின் போது, 6ம் வகுப்பு மாணவிகள் சிலரிடம் தலைமையாசிரியர் அந்தோணி கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.


தகவலறிந்த மாணவிகளின் பெற்றோர் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டர், மாவட்ட கல்வி அலுவலர், உதவி தொடக்க கல்வி அலுவலருக்கு புகார் மனு அனுப்பினர்.ரிஷிவந்தியம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் கண்ணன், விஸ்வநாதன் ஆகியோர் அத்தியூர் பள்ளி மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டு மாவட்ட கல்வி அலுவலருக்கு அறிக்கை அனுப்பினர். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) தனசேகரன் அத்தியூர் நடுநிலைப்பள்ளியில் மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் நேற்று முன்தினம் (17ம் தேதி) விசாரணை மேற்கொண்டார்.இதையடுத்து, தலைமையாசிரியர் அந்தோணியை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தனசேகரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அதற்கான உத்தரவை தலைமையாசிரியர் அந்தோணியிடம் ரிஷிவந்தியம் உதவி தொடக்க கல்வி அலுவலர் கண்ணன் நேற்று மாலை வழங்கினார்.

No comments:

Post a Comment