Pages

Friday, December 18, 2009

வேலை வாங்கி தருவதாக மோசடி

"இஸ்ரோ' நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 15 பேரிடம், 30 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை, ஈரோடு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடுகின்றனர்.ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கு, கன்னியாகுமரி மாவட்டம் காட்டுப்புதூரை சேர்ந்த நாராயணமணி(65), இந்திய விண்வெணி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ)வேலை வாங்கித் தருவதாக தெரிவித்தார். இதை நம்பிய பாண்டியன், ஒரு லட்சம் ரூபாய் வரை நாராயணமணியிடம் கொடுத்தார். இருந்தும் வேலை கிடைக்கவில்லை.

இதனால், அதிருப்தி அடைந்த பாண்டியன், இதுகுறித்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். நாராயணமணியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தேவக்கோட்டையை சேர்ந்த ஒய்யப்பன்(48), கன்னியாகுமரியைச் சேர்ந்த எட்வின் விக்டர் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. இவர்கள், ஈரோடு, கோவை, சிவகங்கை மாவட்டங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 15 பேரிடம், 30 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்திருப்பதும் தெரிந்தது. நாராயணமணி, ஒய்யப்பன் ஆகிய இருவரும் கைது செய்த போலீசார், தலைமறைவான எட்வின் விக்டரை தேடுகின்றனர்.

No comments:

Post a Comment