சர்வதேச தடகள வீரர் ஜெயச்சந்திரன் நேற்று அதிகாலை கோவையிலுள்ள தனது தந்தை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.கோவை சிங்காநல்லூர் அக்ரகாரத்தை சேர்ந்த ஹரிநாராயணன் மகன் ஜெயச்சந்திரன்(39). இவர், திருச்சி ரோட்டிலுள்ள எல்.ஐ.சி., தலைமை அலுவலகத்தில் 15 ஆண்டுகளாக அலுவலராக பணிபுரிந்து வந்தார்.தெற்கு ஆசிய தடகள போட்டியில் இந்திய அணியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.பல ஆண்டுகளாக அகில இந்திய 100 மீ., ஓட்டத்தில் முதலிடம் பெற்றார். அகில இந்திய எல்.ஐ.சி., தடகள போட்டியிலும் 100 மீ., ஓட்டத்தில் 15 ஆண்டுகளாக முதலிடம் பெற்று வந்தார்.
இரண்டு ஆண்டுகளாக, தனது தந்தை வீட்டில் தங்கி வருகிறார். ராமநாதபுரம் கிருஷ்ணா காலனியில் இவரது மனைவி சுமிதா(34), மகள்(9) தங்கி உள்ளனர்.வரும் ஜனவரியில் நடக்கவுள்ள அகில இந்திய எல்.ஐ.சி. ,தடகள போட்டிக்காக தினமும் பயிற்சி எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை சிங்காநல்லூரிலுள்ள தந்தையின் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.காரணம் உடனடியாக தெரியவில்லை. கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின், உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிங்காநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment