இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோயிலில் வரும் 27ம் தேதி வரை பகல்பத்து உற்சவமும், 28ம் தேதி அதிகாலை வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறப்பு தரிசனமும், அன்று இரவு முதல் 2010 ஜனவரி 6ம் தேதி வரை 10 நாட்களுக்கு இராப்பத்து உற்சவமும் நடக்கிறது.
28ம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலை 12 மணி முதல் 2 மணி வரை விஸ்வரூபம், அலங்காரம் மற்றும் தனுர்மாத பூஜை நடைபெறும். அதிகாலை 2.30 மணியளவில் மேற்கு கோபுர வாயில் வழியாக கட்டணம், அனுமதிசீட்டு உள்ளவர்கள் அவ்வழியாக மூலவர் மற்றும் மகா மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீபார்த்தசாரதியை தரிசனம் செய்யலாம். அதன்பின் அதிகாலை 4 மணிக்கு உற்சவர் மகா மண்டபத்திலிருந்து உட்பிரகாரமாக வலம் வந்து 4.30 மணிக்கு பரமபதவாசலை வந்தடைவார். பரமபதவாசல் திறக்கப்பட்டு, எதிரே எழுந்தருளியிருக்கும் நம்மாழ்வாருக்கு காட்சி தருவார். காலை 6 மணிக்கு பிறகு சிறப்பு தரிசனம் மற்றும் பொது தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment