மறைமலைநகரில் பட்டப்பகலில் வீடு புகுந்து, இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திரா மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் மதுசூதனன். பி.இ., பட்டதாரி. மறைமலைநகர் மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர், தனது ஊரைச் சேர்ந்த சரிதா(22) என்பவரை ஓராண்டுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் மறைமலைநகர் கலைவாணர் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.
நேற்றுமுன்தினம் மாலை 6.30 மணிக்கு, வேலைக்கு சென்ற மதுசூதனன் வீடு திரும்பினார். வீடு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அவரது மனைவி ஜன்னல் கம்பியில் கட்டிப்போட்ட நிலையில் இறந்து கிடந்தார். அதிர்ச்சி அடைந்த அவர், மறைமலைநகர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். மர்ம நபர்கள் சரிதாவை கற்பழித்து கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த ஐந்து சவரன் தங்கத்தாலி மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.பட்டப்பகலில் நடந்த கொலை, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைமலைநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Friday, December 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment