வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணத் தை, நாட்டிற்கு மீண்டும் கொண்டு வருவதற்கான அரசின் முயற்சியின் ஒரு பகுதியாக, லீச் செஸ்டைன் வங்கியில் கணக்கு வைத்திருபவர்களின் வருமான வரி ஆவணங்களை அத்துறை ஆராய்ந்து வருகிறது.
இதுகுறித்து, ராஜ்யசபாவில், கேள்வி நேரத்தில் பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக் கம் கூறியதாவது: ஜெர்மன் நாட்டில் உள்ள லீச்செஸ்டைனில் அமைந்துள்ள எல்.ஜி.டி., வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தொடர் பான வழக்குகளை வருமான வரித்துறை மீண்டும் ஆய்வுசெய்கிறது. ஜெர்மனிய வரிவிதிப்பு துறை அதிகாரிகள், எல்.ஜி.டி., வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்த தகவல்களை இந்திய அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். இவ்வாறு எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் கூறினார்.
ஜெர்மன் அதிகாரிகள் கொடுத்த தகவல்களில் உள்ளவர்களுக்கு பெரியளவில் வருமானம் தரும் வகையிலான சொத் துக்கள் உள்ளனவா என்பது குறித்து, மதிப்பிட்டு வருவதாக, நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியா மற்றும் ஜெர்மன் ஆகிய இருநாடுகளுக்கு இடையிலான இரட்டை வரி விதிப்பு தடுப்பு ஒப்பந்தத்தின் (டி.டி. ஏ.ஏ.,) அடிப்படையிலேயே, அந்நாட்டின் வரித்துறையினர் இந்த தகவல்கள் அளித்துள்ளனர். இதற்கிடையில், சுவிஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே, அந்நாட்டில் அதிகளவு வங்கிகளில் டிபாசிட் செய்துள்ள இந்தியர்கள் குறித்த விவரங்களை பரிமாறிக் கொள்வதற்காக, இரட்டை வரிவிதிப்பு தடுப்பு ஓப்பந்தத்தை திருத்துவது, பற்றிய பேச்சுவார்த்தை, கடந்த 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை பெர்னே நகரில் நடைபெற்றது. ஏனென்றால், சுவிஸ் நாடு, இதுவரை தங்கள் நாட்டு வங்கிகளில் டிபாசிட் செய்துள்ள இந்தியர்கள் பற்றி தகவல்களை தெரிவிக்க மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Wednesday, December 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment