இந்தோனேசியாவின் சாதனை பதிவுத்துறை மேலாளர் நதாரி கூறியதாவது: எங்கள் குழுவினர், சுபர்வோனாவை, இந்தோனேசியாவின் மிக உயரமான மனிதராக அறிவித்துள்ளனர். இவர், இந்தோனேசியாவில் முந்தைய சாதனையாக இருந்த 2.21 மீட்டர் உயரத்தை முறியடித்துள்ளார். இவர், உலகிலேயே மிக உயரமான மனிதர் என கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யுமாறு கூறியுள்ளோம். இவ்வாறு நதாரி கூறினார்.
இதுகுறித்து சுபர்வோனா கூறுகையில்,"சில நேரங்களில் என் உயரத்தை பற்றி பெருமைப்படுகிறேன். ஆனால், அதிக உயரமாக இருப்பது சில நேரங்களில் எனக்கு பிரச்னையை ஏற்படுத்துகிறது. என்னால் சாதாரண மக்களை போல வாழ முடியவில்லை. பஸ்சில் ஏறுவது மற்றும் எனக்கு ஏற்ற உடைகளை தேர்ந்தெடுப்பதில், மிகவும் பிரச்னை ஏற்படுகிறது" என்றார்.
No comments:
Post a Comment