"லாட்டரி வரைமுறைச் சட்டம் 1998ன் படி, வாரத்துக்கு ஒரு முறைதான் குலுக்கல் நடத்த வேண்டும். பல முறை குலுக்கல் நடத்துவதை மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்,'' என்று, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் சில மாநிலங்களில் லாட்டரி வியாபாரத்துக்கு தடை விதிக்கப்பட்டாலும் பல மாநிலங்களில் இன்னும் அது லாபம் கொழிக்கும் தொழிலாகவே நடத்தப்பட்டு வருகிறது. இப் போது புதிய தொழில்நுட்பத்தினால் ஆன்-லைன் லாட்டரிக்கு மவுசு கூடியுள்ளது. சிக்கிம் மாநில அரசு நடத்தி வரும், "சிக்கிம் சூப்பர் லாட்டோ' என்ற ஆன்-லைன் லாட்டரி வியாபாரத்தில் ஒரு வாரத்தில் பலமுறை குலுக்கல் நடத்தப்படுகிறது. இதன் மூலம் ஒரு வாரத்துக்கு 40 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
இதை எதிர்த்து பிபாஷ் கர்மகர் என்பவர், "ஒரு வாரத்தில் அடிக்கடி குலுக்கல் நடத்தப்படுவதன் மூலம் இளைய சமுதாயத்தை இதற்கு அடிமையாக்கி அவர்களிடமிருந்து பணத்தைப் பறிக்கும் இந்த லாட்டரியை ஒட்டு மொத்தமாக உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும்' என்று, பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள், "வாரத்துக்கு ஒரு முறை குலுக்கல் நடத்த லாட்டரி சட்டம் 1998ன் படி எவ்விதத் தடையும் விதிக்கப்படவில்லை. சட்டத்துக்கு விரோதமாக மாநில அரசு நடந்தால் அந்த நடவடிக்கைகளுக்கு உடனடியாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை குலுக்கல் நடக்கிறது என்ற மனுதாரரின் புகார் உண்மை என்றால், அதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் " என்று உத்தரவிட்டனர்.
Wednesday, December 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment