கொலைக் குற்றவாளிகளிடம் இருந்து எப்படி எல்லாம் உண்மையை வரவழைக்க முடியும் என் பதை போலீசாரிடம் கேட் டால் பெரிய பட்டியலே கிடைக்கும். ஆனால், அமெரிக்காவில் ஒரு மாகாணத்தில் வித் தியாசமான முறையில் குற்றவாளிகளிடமிருந்து உண்மையை கறக்கின்றனர்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள ஒரு சிறையில், கொலையானவர்களின் படம் போட்ட சீட்டுக் கட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு சீட்டுக் கட்டின் விலை 86 ரூபாய் மட்டுமே. இதுவரை 10 ஆயிரம் சீட்டுக் கட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. ஒரு ஆண்டாக இந்த விற் பனை நடந்து வருகிறது. குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாத கொலை வழக்குகளை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர இப்படியொரு வித்தியாசமான திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். அந்தக் கார்டுகளில் கொலை செய்யப்பட்டவரின் படத்தின் கீழ், "என் னைக் கொன்றவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?', "நான் யார் தெரியுமா?', "என் கொலை வழக்கு பற்றி ஏதாவது உங் களுக்குத் தெரியுமா?' என்ற கேள்விகள் இருக்கும். அதற்கும் கீழ், "தொடர்பு கொள்ளுங்கள் என்று போன் நம்பர்கள் கொடுக் கப்பட்டுள்ளன. இதன் மூலம் கொலைக் குற்றவாளி ஒருவேளை சிறைக்குள் இருந்தால், இந்த சீட்டுகளை அடிக்கடி பார்ப்பதால் மனம் மாறி குற்றத்தை ஒப்புக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என் றும், கொலைக் குற்றவாளி வெளியிலிருந்து அவனது நண்பன் சிறைக்குள் இருந்தால் அவன் மனம் மாறிக் காட்டிக் கொடுக்கவும் வாய்ப்புள்ளது என்றும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Wednesday, December 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment