Pages

Wednesday, December 2, 2009

மலேசியாவில் மத மாற்ற சிக்கல் ?

மலேசியாவில், சிறுவயதிலேயே முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்ட பெண் ஒருவர், தற்போது தன்னை இந்துவாக அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளார். மலேசியாவை சேர்ந்த முஸ்லிம் பெண் எஸ்.பங்கார்மா (27). இவருக்கு ஏழு வயதாக இருக்கும் போது, இவர் பெனான்க் மாகாணத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டு, முஸ்லிம் பெயரும் சூட்டப்பட்டது. அவரது அடையாள அட்டையிலும், அவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் என்றே குறிக்கப்பட்டுள் ளது. ஆனால், அவர் பருவ வயதை அடைந்ததும் தன்னை இந்துவாக அறிவித்துக் கொண்ட, பங்கார்மா, இந்து மதத்தை சேர்ந்த ஒரு இளைஞரை திருமணம் செய்து கொண்டார்.


எனினும், அவரால் அவரது திருமணத்தை பதிவு செய்ய முடியவில்லை. ஏனென்றால், மலேசிய நாட்டு சட்டப்படி, அந்நாட்டு முஸ்லிம் கள் வேறு மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்யக் கூடாது அல்லது அந்த வேற்று மதத்தவர் முஸ்லிம் மதத்திற்கு மாற வேண்டும். இதனால், பங்கார்மா, தன் எட்டு வயது மற்றும் இரண்டு வயது குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில், கணவர் பெயரை தந்தை என்று குறிப்பிட முடியாத நிலையில் உள்ளார். இதனால், தான் இந்து மதத்திற்கு மாற விரும்புவதாகவும், பெயரையும் மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், மலேசியாவில், முஸ்லிம் மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாறுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. இதுகுறித்து பங்கார்மா கூறுகையில், "நான் இந்துவாகவே பிறந்தேன். நான் இந்துவாகவே வாழ்வேன். இந்து மதத்தை சேர்ந்தவளாகவே இறக்க விரும்புகிறேன்' என்றார். ( MODEL )

No comments:

Post a Comment