தங்கள் மனைவி மற்றும் கணவர்களை மாற்றிக் கொண்டு, உறவு வைத்த 12 தம்பதிகள், ஈரானில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானில் இஸ்லாமிய ஷரியத் சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. இதனால் அங்கு கள்ளத் தொடர்பு, விபசாரம், ஆபாச வெப்சைட் நடத்துபவர்கள் போன்றோரை கல்லால் அடித்தே கொன்று விடுவர். இப்படி மிகுந்த கண்காணிப்பு உள்ள அந்த நாட்டில், 12 தம்பதிகள் தங்களுக்குள் ஜோடிகளை மாற்றி உறவு கொண்டிருந்ததைக் கண்டறிந்த அந்நாட்டு போலீஸ் அவர்களைக் கைதுசெய்துள்ளது.
போலீஸ் அளித்த அறிக்கையில்,"இவர்கள் தங்களுக்குள் "ஈரான் மல்ட்டிபிளிகேஷன்' என்ற வெப்சைட்டை, கள்ளத் தொடர்புக்காக நடத்தி அதன் மூலம் தங்கள் ஜோடிகளை மாற்றி, ஒரே இடத்தில் அனைவரும் பலமுறை உறவு கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பல்கலைக்கழகங்களில் பட்டம் வாங்கியவர்கள். சிலர் அரசு ஊழியர். சிலருக்கு குழந்தைகள் இருக்கின்றனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் பெயர் விவரங்கள், எங்கு யாரால் கைது செய்யப்பட்டனர் என்பது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. இப்படிப்பட்ட மக்களை சைத்தானை வழிபடுவர்கள் என்று அங்கு கருதுகின்றனர். இதற்காக அந்நாட்டு போலீஸ், விழாக்கள், பார்ட்டிகளில் திடீர் ரெய்டு நடத்தி "அந்த' மாதிரியான மக்களைப் பிடித்து தண்டனை அளிக்கின்றனர். ( MODEL COUPLE - not in the above group )
Wednesday, December 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment