( Delhi Slum girl )திட்டக் கமிஷனின் கணக் கெடுப்பின் படி, நம் நாட் டில் 30 கோடியே 70 லட்சம் பேர் வறுமைக் கோட்டின் கீழ் இருக்கின்றனர். லோக்சபாவில் துணைக் கேள்விகளுக்கு பதிலளிக்கையில் அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது: குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும், நகர்ப்புறங்களில் 2,400 கலோரிக்கு கீழும், கிராமப்புறங்களில் 2,100 கலோரிக்கு கீழும் உணவு கிடைத் தால் தான், அவர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் என்று கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவர்.
இந்த பார்முலாவை பொருளாதார நிபுணர் லக்டேவாலா தலைமையில் அமைக்கப்பட்ட குழு, 1983ம் ஆண்டு முடிவு செய் தது. இப்போதும் இதே பார்முலாவை தான் மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. சமீபத்தில் பொருளாதார நிபுணர் டெண்டுல்கர் தலைமையில் மத்திய திட்டக் குழு, வறுமைக் கோட்டிற்கு கீழே இருக் கும் மக்களின் கணக்கெடுப்பை புதிதாகத் துவங்கியுள்ளது. இந்த கணக்கெடுப்பு முடிக்க நான்கு ஆண்டுகளாகும். உணவு வங்கி, தனிநபர் வருமானத்தை வைத்து வறுமைக் கோட்டை நிர்ணயம் செய்கிறது. ஆனால், இந்த நிர்ணயத்தை இந்திய அரசு ஏற்கவில்லை. நம் நாட்டை பொறுத்தவரை, மக்களின் செலவு செய்யும் திறன், பொருள் வாங்கும் திறன் என்கின்ற அடிப்படையிலேயே வறுமைக் கோட்டை நிர்ணயம் செய்கிறோம். இவ்வாறு நாராயணசாமி தெரிவித்தார்.
No comments:
Post a Comment