Pages

Sunday, December 6, 2009

ஊனமுற்றோரை ஊனமுற்றோரை போல் படம் அமிதாப் பச்சன் மீது வழக்கு ?

நடிகர் அமிதாப்பச்சன் நடித்த “பா” என்ற படம் திரையிடப்பட்டு உள்ளது. இதில் அமிதாப்பச்சன் மகனாகவும், அவருடைய மகன் அபிஷேக்பச்சன் தந்தையாகவும் நடித்து உள்ளனர். சிறுவயதிலேயே “புர கேரியா” என்னும் நோய் தாக்கி முதுமை தோற்றத்தில் சிறுவன் போன்ற வேடத்தில் அமிதாப்பச்சன் நடித்திருக்கிறார்.

இந்த படத்தை எதிர்த்து பீகார் மாநிலம் பாட்னா கோர்ட்டில் வக்கீல் சுருதிசிங் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

1995-ம் ஆண்டு ஊனமுற்றோர் பாதுகாப்பு உரிமை சட்டப்படி ஊனமுற்றோரை கேலி செய்வது, அவர்களை கேலியாக சித்தரிப்பது குற்றமாகும்.

அமிதாப்பச்சன் “பா” படத்தில் “புரகேரியா” நோய் தாக்கிய 13 வயது சிறுவனாக நடித்து உள்ளார். அவரை கேலிப்பொருளாக்கி படத்தில் காட்டுகிறார்கள். இது ஊனமுற்றோரை ஊனமுற்றோரை போல உள்ளது.

ஊனமுற்றோர் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே அமிதாப்பச்சன், படத்தயாரிப்பாளர் பாலகிருஷ்ணா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment