Pages

Sunday, December 6, 2009

தாதாக்களின் பண வரத்து நிறுத்தம் கலங்கும் ஹிந்தி பட உலகம் ?

துபாயில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், அங்கு பல நூறு கோடிக் கணக்கில் முதலீடு செய்துள்ள பாலிவுட் நட்சத்திரங்கள், இப்போது அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக் கின்றனர்.மும்பை குண்டுவெடிப்பு பயங்கரத்துக்கு பின், கடந்த 1993ல், பிரபல தாதா தாவூத் இப்ராகிம், இங்கிருந்து தப்பி துபாய்க்குச் சென்றான். அங்கிருந்து பாகிஸ்தான் வந்து லாகூரில் நிரந்தரமாகத் தங்கி விட்டான்.


அங்கிருந்தபடியே பாக்., துபாய் உள்ளிட்ட நாடுகளில் பங்குச் சந்தையில் ரகசியமாக முதலீடு செய்து வருகிறான்.பாலிவுட் திரைப்படங்களை வெளிநாடுகளில் திரையிடும் உரிமை கொஞ்சம் கொஞ்சமாக தாவூத் கைக்குப் போன பின் பாலிவுட்டில் கோடிக் கணக்கில் பணம் புரள ஆரம்பித்தது. துபாயில் பாலிவுட் திரைப் படங்கள் வெளியாகத் தொடங்கிய பிறகு நட்சத்திரங் களின் வருமானம் அதிகரிக்க ஆரம்பித்தது. அதனால், துபாய் தொடர்ந்து பாலிவுட்டின் காமதேனுவாக இருந்து வந்தது.


இன்றும் பாலிவுட்டின் மொத்த வருமானத்தில் 30 லிருந்து 40 சதவீத வருமானம் அங்கிருந்துதான் வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பாலிவுட் நட்சத்திரங்கள், துபாயில் படம் வெளியிடுவதோடு படிப்படியாக ரியல் எஸ்டேட்டிலும் தங்கள் முதலீட்டைத் துவக்கினர். குறிப்பாக, இப்போது அங்கு தவிடுதாங்கிப் போயிருக்கும் "துபாய் வேர்ல்டு' நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் பிரிவான "நகீல்' நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.


நகீலின், கடற்கரைப் பகுதியில் பங்களாக்கள் கட்டும் திட்டத்தில் ஷாருக்கான், 2002ல் செய்த முதலீடு ஒரு கோடி ரூபாய். திட்டம் முடியும்போது அவரின் மொத்த முதலீடு 50 கோடி ரூபாய். அவரே, துபாயில் "அல் தானா' என்ற இடத்தில் "எஸ்.ஆர்.கே., பவுலிவார்டு' என்ற பிராஜக்ட்டை நகீலுடன் இணைந்து 2008 செப்டம்பரில் துவக்கினார். இப்போது அதுவும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறது.துபாயின் சிக்கலால், அங்கு வெளியிடத் தயாராக இருந்த அமிதாப் - அபிஷேக் நடிக்கும் "பா', "த்ரீ இடியட்ஸ்' உள்ளிட்ட பாலிவுட் படங்களை வெளியிடாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment