செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது "ஒசாமா பின்லாடன் எங்கு மறைந்திருக்கிறார் என்பதைப் பற்றி உருப்படியான உளவுத் தகவல்கள் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அப்படி கிடைத்திருந்தால், அவரைப் பிடித்திருப்போம். தலிபான்களால் பிடித்து வைக்கப்பட்ட ஒருவர், சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், "தனது நண்பர் ஒருவர் ஒசாமா பின்லாடனை சந்தித்ததாகவும், ஒசாமாவைச் சந்திக்க தன்னாலும் ஏற்பாடு செய்ய முடியும். ஒசாமா பின்லாடன் ஒரே இடத்தில் தங்குவதில்லை' என்றும் கூறியுள்ளார். இருந்தாலும், இந்தத் தகவல்களை என்னால் உறுதி செய்ய முடியவில்லை"இவ்வாறு ராபர்ட் கேட்ஸ் கூறினார்.
No comments:
Post a Comment