Pages

Saturday, December 19, 2009

விவேக் ஓபராய் மகிழ்ச்சி ?

2002 ஆம் ஆண்டு கம்பெனி படத்தின் மூலம் விவேக் ஓபராயை திரையில் அறிமுகப்படுத்தியவர், ராம் கோபால் வர்மா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏறக்குறைய ஏழு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் விவேக் ஓபராய் நடிக்கிறார்.

இந்த சந்தோஷம் ஓபராயின் ஒவ்வொரு அசைவிலும் தெ‌ரிகிறது. "என்னிடம் பலபேர் உங்கள் ட்‌ரீம் கேரக்டர் எது என்று கேட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் இதுதான் என்று எதையும் கூற தோன்றவில்லை. ராம் கோபால் வர்மா ரக்த ச‌ரித்ரா படத்தில் என்னுடைய கேரக்டரை சொன்ன போது, இதுதான் என்னுடைய ட்‌ரீம் கேரக்டர் என்பதை உணர்ந்து கொண்டேன. அத்தனை அற்புதமான வேடம்" என பரவசப்படு‌கிறார்.

ரக்த ச‌ரித்ரா தெலுங்கு, இந்தி இரு மொழிகளில் வெளியாகிறது. ஆந்திராவை கலக்கிய ப‌ரி‌ட்டால ரவி என்ற ரவுடியை பற்றிய கதை. இதில் ப‌ரித்தல ரவியாக விவேக் ஓபராயும், அவனது கூட்டாளியாக தமிழ் நடிகர் சூர்யாவும் நடிக்கின்றனர்.

No comments:

Post a Comment