Pages

Saturday, December 19, 2009

கோயில் அறங்காவலர் ஆனார் மோடி

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, கடந்த சனிக்கிழமையன்று, சோம்நாத் கோவில் அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியா சுதந்திரம் அடைந்த பின், சர்தார் பட்டேலின் முயற்சியால், சோம்நாத் கோவில் புதுப்பிக்கப்பட்டது. இந்த கோவிலுக்கான அறங்காவலர் நியமிப்பது தொடர்பான கூட்டம், கடந்த சனிக்கிழமையன்று, காந்திநகரில் நடந்தது. இதில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறங்காவலராக நியமிக்க, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அனைவரும், ஒருமனதாக ஒப்புக் கொண்டனர். பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மற்றும் கேஷுபாய் பட்டேல் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


இந்த சோம்நாத் கோவில் மிகவும் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, அயோத்திக்கான தன் ரத யாத்திரையை, இந்த கோவிலில் இருந்து தான் துவங்கினார்.நரேந்திர மோடியை அறங்காவலராக தேர்ந்தெடுத்திருப்பது குறித்து, கோவில் அறங்காவலர் குழு தரப்பில் கூறுகையில், "நரேந்திர மோடியின் தனிப் பட்ட திறன் காரணமாகவே, அவர் கோவில் அறங் காவலராக நியமிக்கப்பட்டுள்ளார்' என்றனர்.

No comments:

Post a Comment