இலங்கையைச் சேர்ந்த தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் டில்லியில் நடைபெறவுள்ளது. இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காணும் நோக்கிலும், அங்கு எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசிக்கும் வகையில் டில்லியில் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., அன்பரசு நேற்று டில்லியில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரை தனித்தனியே சந்தித்துப் பேசினார்.
அதன் பிறகு இந்த தகவலை தெரிவித்த அன்பரசு,"டில்லியில் நடைபெறவுள்ள இலங்கைத் தமிழர் குறித்த கருத்தரங்கில், இலங்கையைச் சேர்ந்த முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். மத்திய அமைச்சர் வாசன் மற்றும் சுதர்சன நாச்சியப்பன் உள்ளிட்ட தமிழக காங்கிரசைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். ராஜிவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் இந்த கருத்தரங்கில் நிறைவேற்றப்படும்" என்றார்.
Saturday, December 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment