
புகைப் பிடிப்பவர்களின் உடலில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை கண்டுபிடிக்க இங்கிலாந்தில் உள்ள வெல்கம் டிரஸ்ட் சாஞ்ஜெர் இன்ஸ்டிடியூட் ஆய்வு நடத்தியது.
டி.என்.ஏ. தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மனிதர்களின் உடல் திசுக்கள் சோதிக்கப்பட்டன. பீட்டல் கேம்பெல் என்பவர் தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. அப்போது திசுக்களில் ஏற்படும் சிறு, சிறு மாற்றங்கள் நோய்களை ஏற்படுத்துவது உறுதிப்படுத்தப்பட்டது.
அந்த வகையில் நுரையீரலில் புற்றுநோய் வருவதற்கான மாற்றத்தை ஏற்படுத்த 15 சிகரெட்டுகள் புகைத்தாலே போதும் என்பது தெரியவந்தது. சிகரெட்டில் உள்ள புகையிலை மற்றும் ரசாயன கலவைகள் அந்த அளவுக்கு ஆபத்தானவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சராசரியாக தினமும் 2 பாக்கெட் சிகரெட் புகைப்பவர்களுக்கு நுரையீரலில் கடும் பாதிப்புகள் உண்டாகும். சிகரெட்டில் உள்ள புகையிலை சக்தியை தாங்க முடியாமல் நுரையீரல் சுருண்டு போகும்.
நாளடைவில் நுரையீரல் முழுவதும் ரசாயன தாக்குதல் ஏற்பட்டு செயல் இழந்து போகும் இந்த எச்சரிக்கை தகவல்கள் “ஜார்னல் நேச்சர்” இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment