Pages

Friday, December 4, 2009

மம்முட்டியுடன் ஸ்ரேயா ஆட்டம் ?

ஸ்ரேயா மலையாளத்துக்கு போகிறார். மம்முட்டி ஜோடியாக “போக்கிரி ராஜா” என்ற மலையாள படத்தில் நடிக்கிறார். தமிழில் அவர் நடித்து கடைசியாக ரிலீசான படம் “கந்தசாமி”. தற்போது சரத்குமார் ஜோடியாக “ஜக்குபாய்” படத்திலும் தனுஷ் ஜோடியாக “குட்டி” படத்திலும் நடித்து வருகிறார். “ஜக்குபாய்” படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஆர்யாவுடன் “சிக்கு புக்கு” படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.

இந்த நிலையில் மலையாள பட வாய்ப்பு வந்துள்ளது. இதில் பிருதிவிராஜூம் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதுபற்றி ஸ்ரேயா கூறும் போது, மலையாள படத்தில் நான் நடிப்பது உண்மைதான். மம்முட்டி, பிருதிவிராஜூடன் இணைந்து நடிக்கிறேன். இருவரும் அண்ணன் தம்பியாக வருகிறார்கள். சிறந்த கதை என்றார்.

ஜனவரி 10-ந்தேதியில் இருந்து பிப்ரவரி 15-ந்தேதி வரை இப்படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். இதில் நடிக்க அதிக சம்பளம் வாங்கி உள்ளாராம்.

No comments:

Post a Comment