'விண்ணை தாண்டி வருவாயா' படத்தின் இசை வெளியீட்டு விழாவை கௌதம்மேனன் லண்டனில் வைத்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் திடீரென்று கைவிட்டதும், தனது அடுத்த படமான விண்ணை தாண்டி வருவாயா படத்திற்காக கௌதம் தேடிப்போன இடம் அதை விட பெரிசு. இவர் போய் சேர்ந்த நேரமோ என்னவோ ரகுமானுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க, இசைப்புயலின் மனது இறக்கை கட்டி பறந்தது. அதே குஷியோடு கௌதமுக்காக கொஞ்சம் சிறப்பாகவே பாடல்களையும் அமைத்துக் கொடுத்திருக்கிறார் ரகுமான். ஆஸ்கர் நாயகனின் பாடல்களை வெளியிடும் விழாவை, உள்ளூரில் நடத்துவதை விட, லண்டனிலேயே நடத்தினால் என்ன என்று நினைத்தாராம் கௌதம். பெரும்பாலான நாட்கள்

வெளிநாட்டிலேயே இருக்கும் ரஹ்மானுக்கும் இது வசதியாக போய்விட்டது. வருகிற 18ந் தேதி லண்டனில் விண்ணை தாண்டி வருவாயா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. சிம்பு, த்ரிஷா மட்டுமல்ல, இங்கிருந்து ஒரு பெரிய கூட்டத்தையே பிளைட் பிடித்து அழைத்துச் செல்லப் போகிறாராம் கௌதம்.
No comments:
Post a Comment