Pages

Sunday, December 6, 2009

நடிகர் அஜித்தின் அட்வைஸ் ஏற்றார் விஜய் ?

மனதில் என்ன தோன்றுகிறதோ அதை வெளிப்படையாக பேசிவிடுவார் நடிகர் அஜித். ஏன் இப்படி? என்று கேட்பவர்களிடம், பின் விளைவுகள் பற்றியெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். இது என் கருத்து அவ்வளவுதான் என்று பளிச்சென்று பதில் தருவார். சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தபோது அஜித் கூறியது," அரசியல் எனக்கு வேண்டாம். சரி வராது. விஜய்யின் அரசியல் பிரவேசம் அவர் தனிப்பட்ட விஷயம். என்னைப் பொருத்தவரை அவர் அரசியலுக்கு வர வேண்டாம். அப்படி வருவதால் அவரது குடும்பம், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் வேண்டுமானால் சந்தோஷப்படலாம். ஆனால் மற்றவர்களுக்கு அதில் எந்த அளவு சந்தோஷமிருக்கும் என்று தெரியவில்லை. அவருடன் நிறைய பேசி பழகியிருக்கிறேன். அவரது நலம் விரும்பியாகவே இதை நான் சொல்கிறேன். ஆனால் அரசியலில் ஈடுபடும் முடிவு அவரது சொந்த விருப்பமே. என்னைப் பொருத்தவரை இனி படங்களின் தரத்தில் அதிக கவனம் செலுத்தப் போகிறேன். எனக்கும் 40 வயது ஆகப் போகிறது. இந்த வயதில் வாழ்க்கையும் தரமாக இருக்க வேண்டும், படங்களும் தரமாகத் தர வேண்டும் "என்றார்.

No comments:

Post a Comment