Friday, December 4, 2009
வேலையின்மை விகிதம் சிங்கப்பூரில் அதிகரித்துள்ளது
இந்த ஆண்டில் ஜூன் மாத கணக்கெடுப்பின் படி வேலை இல்லாத சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர் நிரந்தவாசிகளின் எண்ணிகை 116,300 அல்லது 5.9 விழுக்காட்டை எட்டியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிட இது அதிகம். 2008 ஜூன் மாதக் கணக்கெடுப்பில் வேலை இல்லாமல் இருந்தவர் எண்ணிக்கை 76,2000 அல்லது நான்கு விழுக்காடு. வேலையின்மை பிரச்சினை அனைத்துத் துறைகளிலும் உள்ளதாக மனித வள அமைச்சின் ஆய்வு புள்ளிவிவரப் பிரிவு 2009ன் மத்தியில் மேற்கொண்ட ஊழியர் ஆய்வு தெரிவித்துள்ளது. எனினும் ஊழியர் அணியில் சிங்கப்பூர்வாசி களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதையும் நேற்று வெளியிடப்பட்ட அந்த ஆய்வு சுட்டியது. இந்த ஜூன் மாதத்தில் சிங்கப்பூர் ஊழியர்களின் எண்ணிக்கை 3 விழுக்காடு கூடியுள்ளது. கடந்த 2008 ஜூனில் இது 2.7 விழுக்காடு உயர்ந்தது. 2007ல் இது 2 விழுக்காடாக இருந்தது. இந்த ஆண்டின் ஜூன் மாத கணக்கெடுப்பின்படி ஊழியர் அணியில் மொத்தம் 1.99 மில்லியன் சிங்கப்பூர் குடியுரிமையுள்ளவர்கள், நிரந்தரவாசிகள் இருந்துள்ளனர். இவர்களில் 57 விழுக்காட்டினர் அதாவது 1.13 மில்லியன் பேர் ஆண்கள். 43 விழுக்காட்டினர் அல்லது 0.86 பேர் பெண்கள் என ஆய்வறிக்கை தெரிவித்தது. தயாரிப்புத் துறை தொடர்பான வேலைகளில் வேலையின்மை அளவு ஓராண்டில் அதிக அளவில் கூடியுள்ளது. கடந்த 2008 ஜூனில் 4.3% ஆக இருந்த இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 7.1% கூடியுள்ளது. அலுவலக எழுத்தர், விற்பனை, சேவைத் துறைகளில் 5.8 விழுக்காட்டிலிருந்து 7.6 ஆக உயர்ந்துள்ளது. சேவைத்துறையில் 3.6 விழுக்காட்டிலிருந்து 5.3 விழுக்காடாகி உள்ளது. வேலையில்லாத நிபுணர்கள், நிர்வாகிகள், அதிகாரிகள், தொழில் நுட்பர்கள் எண்ணிக்கை 2.5 விழுக்காட்டிலிருந்து 3.9 விழுக்காடு கூடியுள்து. தயாரிப்புத் துறையில் அதிகமானோர் வேலை நீக்கம் செய்யப்பட்டதால், கட்டுமானத் துறையைவிட இத்துறையில் வேலையின்மை அளவு கூடியுள்ளது. கட்டுமானத் துறையில் 2.8 விழுக்காடாக இருந்த வேலையின்மை விகிதம் 4.1 விழுக்காடு ஆகியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment