2001-ம் ஆண்டின் பிற்பகுதியில் ஆப்கானிஸ்தானில் மலைப் பகுதி குகைகளில் ஒசாமா பின் லாடன் மறைந்திருந்தபோது அமெரிக்கப் படையினருக்கு கைக்கு எட்டிய தொலைவில் இருந்ததாகவும் ஆனால் அமெரிக்கப் படையினரால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் அந்த அறிக்கை கூறியது.
ஒசாமாவை பிடிப்பதற்கான இராணுவ வசதிகளை அப்போதைய அதிபர் புஷ் தலைமையிலான அரசு பயன்படுத்த தயாராக இல்லை என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
ஒசாமா பின் லாடன் மிகவும் பலவீனமாக இருந்த அந்த தருணத்தில் அவரை பிடிக்க முயற்சிக்காமல் போனதால், ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் தொடர்ந்து கிளர்ச்சிகள் உருவாவதற்கு காரணமாக அமைந்து விட்டது என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பின் லாடனைப் பின்தொடர்ந்து செல்லவோ அல்லது அவர் தப்பிச் செல்வதைத் தடுக்கவோ அமெரிக்கப் படையினருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
இதனால் அன்று பின் லாடன் டோரா போரா மலைப்பகுதியிலிருந்து பாகிஸ்தானுக்குள் சுதந்திரமாக தப்பிச் சென்றுவிட்டதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.
பின் லாடன் மறைந்திருந்த மலைப் பகுதியிலிருந்து வெளியில் வரக்கூடிய வழிகளை தடை செய்ய அமெரிக்கப் படையினர் கேட்டுக்கொண்டதை ரம்ஸ்பெல்டு நிராகரித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
அன்று அந்த வழிகளைத் தடுத்திருந்தால் அன்று பின் லாடனால் தப்பிச் சென்றிருக்க முடியாது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் அமெரிக்க வீரர்களை அனுப்புவது குறித்து இன்று அறிவிக்கவுள்ள வேளையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
கடந்த கால அனுபவங்களை நல்ல பாடமாக கற்றுக்கொள்வதற்கு உதவியாக உரிய நேரத்தில் செனட் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக வாஷிங்டன் தகவல்கள் கூறின.
செனட் வெளியுறவுக் கொள்கை குழுவின் தலைவரான செனட்டர் ஜான் கெரி அந்த அறிக்கையை தயாரித்துள்ளார். பின் லாடனைப் பிடிக்க அமெரிக்கப் படையினர் எப்படி தவற விட்டனர் என்பது பற்றி அந்த அறிக்கையில் விவரமாகக் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment