Pages

Friday, December 4, 2009

மீண்டும் மேனகா காந்தி ?

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புகைப் பிடிப்பதால் சுமார் 9 லட்சம் பேர் பலியாகிறார்கள். இது தவிர புகையிலையை பயன்படுத்துபவர்களும் லட்சக்கணக்கில் உயிரிழக்கிறார்கள். புகையிலையால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய சுகாதார துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை படங்கள் அச்சிடப்படுகின்றன. புகை பிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கானது என்ற வாசகமும் தவறாது இடம் பெறுகிறது.

ஆனால் இந்த நடவடிக்கைகள் போதாது என்று பாராளுமன்ற சுகாதார கமிட்டியில் இடம் பெற்றுள்ள எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்தில் இந்த கமிட்டி கூட்டம் டெல்லியில் நடந்தது. புகை பிடிப்பதை தடுக்க பல்வேறு யோசனைகள் தெரிவிக்கப்பட்டன.

இந்த கமிட்டியில் உறுப்பினராக மேனகாகாந்தி உள்ளார். அவர் புகை பிடிப்பதை தடுக்க புதிய பரிந்துரை ஒன்றை செய்துள்ளார். அதாவது ஒவ்வொரு சிகரெட் பாக்கெட்டுடனும் புற்று நோய்க்கான இலவச சிகிச்சை பெறுவதற்கு உரிய கூப்பன் இணைக்கப் பட்டிருக்க வேண்டும் என்று மேனகா காந்தி கூறியுள்ளார்.

ஒவ்வொரு தடவையும் சிகரெட்டை வெளியில் எடுக்கும் போது புற்று நோய் சிகிச்சை கூப்பன் கண்ணில் படும். இதன் மூலம் புகை பிடிப்பதை கணிசமாக குறைக்க முடியும். இந்த பரிந்துரைக்கு எம்.பி.க்கள் குழு ஆதரவு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றத்தில் இது பற்றி விவாதிக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment