Pages

Friday, December 4, 2009

நடிகர் சல்மான்கான் வேன் முற்றுகை ?

மத்திய பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. இந்தூர் மாநகராட்சி மேயர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகர் சல்மான்கான் பிரசாரம் செய்தார். இதற்காக ஓட்டலில் தங்கி இருந்த அவர் திறந்த வேனில் பிரசாரத்துக்கு செல்ல வெளியே வந்தார்.

அப்போது நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அங்கு திரண்டு இருந்தனர். அவர்கள் சல்மான்கானை முற்றுகையிட்டு நெருங்க முயன்றனர். இதனால் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. சல்மான்கான் வேனுக்கு செல்ல முடியாத நிலை உருவானது.

எனவே போலீசார் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினார்கள். ரசிகர்கள் கலைந்து ஓடினார்கள். அதன் பிறகு சல்மான்கான் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தார்.

No comments:

Post a Comment