Pages

Saturday, December 19, 2009

காதல் காட்சிகளுக்கு ஒரு எல்லை வகுக்க வேண்டும்- எம் ஜி ஆர்


ஒரு நடிகன், பல்வேறு குண விசேஷங்கள் உள்ள பாத்திரங்களை ஏற்று நடித்தால் தான் நடிப்பில் பல புதுமைகள் பிறக்க முடியும்; இப்போது நான் அறிமுகமாகியுள்ள அளவுக்கு, அறிமுகமாகாத நிலையில் முன், "என் தங்கை' என்ற படத்தில் நடித்தேன்; அந்தப் படம் வெற்றி வாயிலை எட்டிப் பிடித்த படமும் கூட. அதில் எனக்குச் சண்டைக் காட்சிகள் இல்லை; ஆனால், அது வெற்றி கண்டது.
நாளடைவில், நான் நடிக்கும் படங்களில் சண்டைக் காட்சிகள் இருக்க வேண்டும் என்ற நிலை எப்படியோ நிரந்தரமாக உண்டாக்கப்பட்டு விட்டது. அதற்குப் படத் தயாரிப்பாளர்கள் சொல்லும் காரணம், "உங்களுடைய சண்டைக் காட்சிகளை ரசிகர்கள் முக்கியமாக எதிர்பார்க்கின்றனர்!' என்பது. அது மட்டுமல்ல, வினியோகஸ்தர்கள் அப்படி சொல் கின்றனர் என்பதும் அவர்கள் கூறும் காரணம். சண்டைக் காட்சிகளே கூடாது என்று கூறத் தேவையில்லை. படக் கதைக்குச் சம்பந்தமில்லாத, தேவைப்படாத பகுதிகளில் அத்தகைய காட்சிகள் இல்லாமலிருப்பதை நாங்கள் வரவேற்கவே செய்வோம் என்பதை உணர்த்தவும் வேண்டும்...
ஒரு படத்தைச் சுட்டிக்காட்டி, அது போன்ற காட்சிகள் வேண்டும் என்றும், அது போன்ற கதை, அதைப் போன்ற உரையாடல், அதைப் போன்ற பாட்டு என்று, "ஒன்றைப் போன்ற மற்றொன்று' என்று தேவையற்ற எதிர்பார்ப்பில் ரசிகர்களின் ரசனைத்திறன் ஈடுபடுவது சரியல்ல. வளரும் கலைக்கு வாய்ப்பூட்டு போடுவதாகும் இது...
அடுத்தது, காதற்சுவை. சாதாரணமாகப் பாட்டு பாடிக் காதல் செய்வது என்பது உலகியலில் இல்லாதது. படங்களில் வருவது போன்று பொதுப் பூங்காக்களில் காதல் புரிவதற்கும் நமது சமூகம் அனுமதிக்காது. ஆயினும், நமது படங்களில், வாழ்க்கையில் ஓர் ஆணும், பெண்ணும் எந்த அளவுக்கு நெருங்கிப் பழகுகின்றனர் என்பதையும், அவர்களுக்கிடையே எழும் கருத்துப் பரிமாற்றங்களையும் வெளிப்படுத்தப் பாட்டுக்களாக எடுக்கின்றனர். உவகைச் சுவை, மனித உள்ளத்திற்கு இன்றியமையாதது என்பதற்காக அமைக்கப்படும் இக்காதல் காட்சிகளுக்கு ஒரு எல்லை வகுக்க வேண்டும்...
"பெற்றால் தான் பிள்ளையா' படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்த எம்.ஜி.ஆர்., அப்படம் வெளியான போது, "பொம்மை'(1967 ஜனவரி) பத்திரிகையில்

No comments:

Post a Comment