நவீன தொழில்நுட்பம் மூலம் பிளாஸ்டிக் பணப் பரிமாற்றம் அல்லது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற எலக்ட்ரானிக் முறை மூலம் பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்று அவை கருதுகின்றன. 2018க்குள் படிப்படியாக செக்குகள் பயன்படுத்துவதை நிறுத்திவிடலாம் என்றும் ஆலோசித்து வருகின்றன. ஆனால், பிரிட்டனில் வருவாய் மற்றும் பென்ஷன் அமைச்சகங்கள் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான செக்குகளைப் பயன்படுத்தி வருகின்றன. வயதானவர்கள், ஊனமுற்றோர், செயலிழந்தவர்கள் மற்றும் சிறிய நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் பணப் பரிமாற்றத்தை செக்குகள் மூலம் தான் நடத்திவருகின்றனர்.
செக்குகளை நிறுத்திவிடலாமா என்று பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்காக டிசம்பர் 16ம் தேதியன்று ஒரு கருத்துக் கணிப்பை அந்நாட்டு ஊதியக் கவுன்சில் நடத்தப்போகிறது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் செக்குகளை நிறுத்திவிடுவது குறித்து தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். "செக்குகளுக்குப் பதிலாக வேறு சில முறைகளை சிலகாலம் நடைமுறையில் வைத்து பரிசோதித்த பிறகே அந்த நடைமுறையை நிறுத்த முயல வேண்டும்' என்று, சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும், பிரிட்டன் அரசு ஒரு சிறு நகரத்தை, "செக் இல்லாத நகரம்' என்று அறிவித்து பரிசோதித்துப் பார்க்கத் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment