இதே போல, ஆஸ்திரேலியாவிலும் பாலியல் கொடுமைகள் நடக்கின்றன என்பதற்கு சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் உதாரணம். "நியூ சவுத் வேல்ஸ்' மாகாணத்தில் ஒரு சிறுமி, 1974 லிருந்து வளர்ப்புப் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டாள். அப்போது அவளுக்கு ஐந்து வயது. அன்றிலிருந்து அவளது 16 வயது வரை 10 ஆண்டுகளில் அவள் 500 தடவை கற்பழிக்கப்பட்டிருக்கிறாள். அந்த வளர்ப்புப் பெற்றோரின் மருமகன் தான் அந்தக் கொடுமையைச் செய்தவன்.
விவரம் அறிந்த பிறகு அந்தப் பெண், இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடுத்து, தனக்கு ஏழு இழப்பீடுகள் தரவேண்டும் என்று கோரியிருந்தார். "பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு தீர்ப்பாய' த்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு, "அந்தப் பெண்ணுக்கு சட்டத்தின் அடிப்படையில் ஒரு தடவைதான் இழப்பீடு வழங்க முடியும்' என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்தார் அந்தப் பெண்.
இதை விசாரித்த நீதிபதி ஸ்டீபன் ரோத்மென் என்பவர் தனது தீர்ப்பில் கூறியதாவது: தீர்ப்பாயம் சட்டத்தைத் தவறாகப் புரிந்து கொண்டதால் பகுத்தறிவுக்கு மாறாக மனம்போன போக்கில் தீர்ப்பளித்துள்ளது. அந்தப் பெண் வளர்ப்புப் பெற்றோரிடம் இருந்த அந்த 10 ஆண்டுகளில், குறைந்தது 500 தடவையாவது பாலியல் கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார். குறிப்பிட்ட சட்டப்பிரிவின் படி அவர் கோரியுள்ள இழப்பீட்டை அவருக்கு வழங்கலாம். இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
சவுத் வேல்ஸ் மாகாணச் சட்டப்படி இதுபோல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று லட்ச ரூபாயிலிருந்து 22 லட்ச ரூபாய் வரை இழப்பீடு கிடைக்கும்.
(Model - not the affected girl )
No comments:
Post a Comment