Pages

Saturday, December 19, 2009

விஸ்கியை விட வோட்கா மேல்

மெரிக்க விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். இதற்காக தினசரி மது குடிக்கும் 96 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் சிலருக்கு வோட்கா, விஸ்கி என தனித்தனியாக 2 மதுபானங்களும் வழங்கப்பட்டன. மது குடித்த மறுநாள் இவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.

அப்போது விஸ்கி குடித்தவர்கள் தங்களுக்கு பல விதமாக மோசமான உடல் நலக்கேடு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

தலைவலி, சோர்வு, தாகஉணர்வு மற்றும் வாந்தி வருவது போன்ற உணர்வுகள் இருப்பதாக கூறினர். அதே நேரத்தில் வோட்கா மதுவை குடித்தவர்கள் அது போன்ற அனுபவங்கள் தங்களுக்கு ஏற்பட வில்லை என்று தெரிவித்தனர்.

விஸ்கியில் “கான் ஜெனரல்” என்ற முலக்கூறுகள் உள்ளன. வோட்காவில் அவை இல்லை. எனவே உடல் நலத்திற்கு கேடாக அமைகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் வோட்காவில் சிறிதளவே அசியோன்னசி பால்டி கைடு, டேன்னின்ஸ் என்ற ரசாயன பொருட்கள் கலக்கப்படுகின்றன என்றனர்.

எந்த மதுவாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக குடிக்கக்கூடாது. நீண்ட நாட்களுக்கு பிறகு அவை உடல் நலத்துக்கு கேடாக அமையும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment