ஓட்டல் பில் தொகை இரண்டு கோடியே 16 லட்சம் செலுத்தாத லிபியா அதிபர் கடாபி மகன் மீது கோர்ட்டில் இத்தாலி ஓட்டல் வழக்கு தொடுத்துள்ளது. லிபியா அதிபர் முவாம்மர் கடாபி, இவரது மகன் அல் சைதி(35). கால்பந்து வீரரான சைதி, உலக அளவில் ஜொலிக்கவில்லை என்றாலும் கால்பந்து விளையாட்டில் பிரபலமாக இருக்கிறார். இவர் 2003ம் ஆண்டு இத்தாலி பெர்குயியா நகர் கால்பந்தாட்ட அணியில் விளையாடி வந்தார். ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டும் ஆடிய இவர் ஊக்கமருந்து உட்கொண்டதற்காக, அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.பின்னர் யுதினிஷ் கேல்சியோ அணியில் சேர்ந்தார். இந்த அணியில் 2005 முதல் 2006ம் ஆண்டு வரை பயிற்சி ஆட்டங்களிலே ஆடிவந்த இவருக்கு, கேக்லியாரி அணிக்கு எதிரான ஆட்டத்தில், 10 நிமிடமே விளையாட வாய்ப்பு கிடைத்தது.
2006 முதல் ஜெனோவா நகர் சாம்தோரியா கால்பந்தாட்ட அணியில் இருந்து வருகிறார். இன்னும் ஒரு ஆட்டத்தில் கூட எதிர் அணியை எதிர்த்து விளையாட வாய்ப்பு கிடைக்க வில்லை.கடந்த 2007ம் ஆண்டு இன்னோவா நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்து இருக்கிறார். ஒரு மாதம் மட்டும் தங்கியிருந்ததற்காக பில் தொகை இரண்டு கோடியே 16 லட்சம் ஏற்பட்டுள்ளது. ஓட்டல் நிர்வாகம் பல முறைகேட்டு பார்த்தும் இவர் தருவதாக இல்லை. இதனால், இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடுத்து இருக்கிறது.
No comments:
Post a Comment