பாரதீய ஜனதா கட்சி அகில இந்திய தலைவராக உள்ள ராஜ்நாத் சிங்கின் பதவி காலம் இந்த மாதத்துடன் முடிந்தது. பாஜக புதிய தலைவரை தேர்வு செய்ய கடந்த சில மாதங்களாக ஆலோசனை நடந்து வந்தது. சுஷ்மா சுவராஜ், அருண்ஜேட்லி, ஆனந்த குமார் உள்பட மூத்த தலைவர்கள் பெயர் பரிசிலிக்கப்பட்டது.
பாஜகவுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டுமானால் இளம் தலைவர் ஒருவரை தலைமை பொறுப்புக்கு கொண்டு வரவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். அறிவுறுத்தியது. மராட்டிய மாநில பாஜக தலைவர் நிதின் கட்காரியை புதிய தலைவராக தேர்வு செய்யலாம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பரிந்துரைத்தார். அதை பாஜக தலைவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
பாஜக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கூட்டம் டெல்லியில் காலை நடந்தது. இதில் பாஜக புதிய தேசிய தலைவராக நிதின் கட்காரியை தேர்வு செய்ய ஏகமனதாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
நிதின் கட்காரி இன்று காலை மும்பையில் இருந்து விமானத்தில் டெல்லி சென்றார். இன்று மதியம் அவர் பாஜக மூத்த தலைவர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
மாலை நடைபெற்ற பா.ஜனதா நாடாளுமன்றக்குழு கூட்டத்தில் கட்காரி பா.ஜனதா தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது
Sunday, December 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment