இதுபற்றி வீட்டில் சொன்னால் பெயில் ஆக்கிவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதற்கு பயந்து மாணவிகள் வீட்டில் சொல்ல பயப்பட்டனர்.
நேற்று 5-ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகளை தனியாக அழைத்த சீனிவாசன் அவர்களிடம் செக்ஸ் டார்ச்சர் செய்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
மாலையில் வீடு திரும்பிய குழந்தைகள் நடந்த சம்பவத்தை வீட்டில் கூற வில்லை. லதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி உடல் சோர்ந்து காணப்பட்டார். ஏன் இப்படி இருக்கிறாய் என்று பெற்றோர் துருவி துருவி கேட்டனர்.
அதற்கு லதா கண்ணீர் விட்டு அழுதபடி நடந்த விவரத்தை கூறினார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளிக்கு வந்தனர். தகவல் அறிந்த மற்ற மாணவிகளின் பெற்றோரும் அங்கு கூடினர்.
50-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு அந்த பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு நடத்தினர். அப்போது கலைந்து சென்ற அவர்கள் இன்று காலை தங்கள் குழந்தைகளுடன் பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதைதொடர்ந்து நடந்த விவரம் குறித்து இதர மாணவிகளிடம் போலீசார் விசாரித்தனர்.
அப்போது ஆசிரியர் சீனிவாசன் இது போன்று பலமுறை மாணவிகளிடம் சில்மிஷம் செய்து வந்ததும், குழந்தைகளை மிரட்டியதும் தெரியவந்தது.
இதையடுத்து அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து சீனிவாசனை இன்று கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக பேட்டையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment