பளார் என அறைந்தார். அத்துடன், சல்மானையும் கண்டபடி திட்டினார். அறை வாங்கிய போதிலும், சல்மான் கான் அதிர்ச்சியை வெளிப்படுத்தவில்லை.
Friday, December 4, 2009
சல்மான் கானுக்கு பெண் கொடுத்த அறை ?
டெல்லியில் நடந்த தனியார் விருந்து நிகழ்ச்சி ஒன்றில், குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான் கானை கன்னத்தில் அறைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். டெல்லியின் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் சில தினங்கள் முன்பு விருந்து நிகழ்ச்சி நடந்தது. அதில் அழைப்பாளராக பாலிவுட் நடிகர் சல்மான் கான் கலந்து கொண்டார். அவரது சகோதரர் சோகைல் கான், நடிகையும் முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென் ஆகியோரும் வந்திருந்தனர். அப்போது டெல்லியின் முன்னணி கட்டுமான நிறுவன அதிபரின் மகள் மோனிகா, திடீரென சுஷ்மிதா சென், சோகைல் கானுடன் தகராறு செய்தார். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதை கவனித்த சல்மான் கான், விரைந்து வந்து இருதரப்பினர் இடையே சமரசம் செய்து வைக்க முயற்சி செய்தார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில், சல்மான் கான் கன்னத்தில் மோனிகா
பளார் என அறைந்தார். அத்துடன், சல்மானையும் கண்டபடி திட்டினார். அறை வாங்கிய போதிலும், சல்மான் கான் அதிர்ச்சியை வெளிப்படுத்தவில்லை.
பளார் என அறைந்தார். அத்துடன், சல்மானையும் கண்டபடி திட்டினார். அறை வாங்கிய போதிலும், சல்மான் கான் அதிர்ச்சியை வெளிப்படுத்தவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment