Pages

Tuesday, December 1, 2009

சூப்பர் காமெடி - வெள்ளை மாளிகை செக்யூரிட்டி சொதபல்

பிரதமர் மன்மோகன்சிங் கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்தபோது அவருக்கு அதிபர் ஒபாமா சிறப்பு விருந்து கொடுத்தார். உலகின் கவனத்தை ஈர்த்த இந்த விருந்து நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் சுமார் 400 பேர் கலந்து கொண்டனர்.

பலத்த பாதுகாப்புடன் நடந்த இந்த விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்காவின் வெர் ஜினீயா மாகாணத்தைச் சேர்ந்த தாரிக் சலகி என்பவரும் அவரது மனைவி மிசிலியும் மிக துணிச்சலாக ஊடுருவி கலந்து கொண்டனர். ஒபாமாவுடன் மிசிலி கை குலுக்கி பேசினார். விருந்திலும் அவர்கள் பங்கேற்றனர்.

நீண்ட நேரத்துக்கு பிறகே அவர்கள் இருவரும் ஒபாமா விருந்தில் கலந்து கொள்ள முன் அனுமதி பெறவில்லை என்று தெரிய வந்தது. உரிய அனுமதி சீட்டு இல்லாமல் அவர்கள் எப்படி விருந்து அரங்குக்குள் நுழைந்தனர் என்பது மர்மமாக இருந்தது.

அமெரிக்க போலீசாருக்கும், உளவுத்துறைக்கும் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை கொடுத்தது. தாரிக்கையும் மிசிலியையும் சோதிக்காமல் உள்ளே அனுப்பிய காவலர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவத்தால் தாரிக்- மிசிலி இருவரும் அமெரிக்கா முழுவதும் பரபரப்பாக பேசப்படுகின்றனர். அவர்களை பற்றிய தகவல்கள் பத்திரிகைகளிலும், இணையத்தளங்களிலும் வெளிவந்தபடி உள்ளன.

தாரிக்-மிசிலி இருவரும் வெள்ளை மாளிகை விருந்து அரங்குக்குள் நுழைந்தது எப்படி? என்பதை இன்று சி.என்.என். தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சொல்லப்போவதாக கூறி இருந்தனர். இதனால் இந்த நேரடி ஒளிபரப்பை காண ஏராளமானவர்கள் ஆவலுடன் இருந்தனர்.

ஆனால் திடீரென இந்த டி.வி. நிகழ்ச்சியை தாரிக்-மிசிலி இருவரும் ரத்து செய்து விட்டனர். தங்களுக்கு யார் அதிகம் பணம் தருகிறார்களோ அவர்களுக்கே பேட்டி கொடுக்கப்போவதாக அறிவித்தனர்.

அவர்கள் 6 இலக்க அளவில் பல கோடி பணம் கேட்கின்றனர். இதனால் அமெரிக்க டி.வி. சானல்கள் அதிர்ச்சியுடன் தாரிக்கை பேட்டி காண தயங்கிபடி உள்ளன.

No comments:

Post a Comment