Pages

Tuesday, December 1, 2009

மீண்டும் சதாம் ஹுசைன் ?


ஈராக்கில் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக நடந்தது. விடுமுறையில் மக்கள் பொழுதை களித்தனர். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அங்குள்ள டி.வி.க்களில் தூக்கிலிடப்பட்ட முன்னாள் அதிபர் சதாம் உசேன் திடீரென தோன்றினார்.

தோன்றியது மட்டுமின்றி ஈராக் மக்களுக்கு பக்ரீத் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். தூக்கிலிடப்பட்ட 3-வது ஆண்டு நினைவு நாளன்று அவர் ஆற்றிய உரைகளை அந்த டி.வி. ஒளிபரப்பியது.

இது ஈராக் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது உரையை டி.வி.யில் ஒளிபரப்பியது யார்? என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்தது.

“சதாம்உசேன்” பெயரில் அவரது ஆதரவாளர்கள் மர்மமான முறையில் புதிதாக டி.வி. சேனல் தொடங்கியிருக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. தனது ஆட்சிக்காலத்தின்போது சதாம்உசேன் “பாத்” என்ற கட்சி தொடங்கியிருந்தார். அந்த கட்சியினர் புதிய டி.வி.யை தொடங்கியிருக்கலாம் என்று தெரிகிறது.

சிரியா நாட்டில் உள்ளட மாஸ்கஸ் நகரை சேர்ந்த முகமது ஜர்போயா என்பவர் இந்த டி.வி.யின் தலைவர் என்றும் கூறப்படுகிறது. மேலும் சதாம்உசேன் ராணுவ உடையிலும், சூட்- கோட் உடையிலும் தோன்றிய புகைப்படங்களும், அவர் வெள்ளை குதிரையில் கம்பீரமாக வந்த காட்சியும் அடிக்கடி ஒளிபரப்பப்பட்டது.

No comments:

Post a Comment