Pages

Friday, December 4, 2009

எட்டு கப் டீ


தினமும் எட்டு கப் டீ குடிப்பவர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட ஆய்வுத் தகவல்: "டீ'யில் இருக்கும் காபின், மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் ஆகிய நோய்கள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மேலும், காபின் மூளைத்திறனை மேம்படுத்துவதோடு, அவர்கள் அதிக எச்சரிக்கை உணர்வுடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்பட உதவுகிறது. இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஊட்டச்சத்து நிபுணரான டாக்டர் காரி ரக்ஸ்டன் என்பவர் கூறுகையில், "காபின் நிறைந்த பானங்களான, காபி, டீ, கோகோ ஆகியவற்றை பற்றி கூறப்படும், கற்பனையான கருத்துகள் குறித்த உண்மையை இந்த ஆய்வு வெளிப்படுத்தி உள்ளது' என்றார்.

No comments:

Post a Comment