Pages

Friday, December 4, 2009

அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கெஞ்சல் ?

பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில், ஆளில்லாத விமானம் மூலமான தாக்குதலை நடத்த வேண்டாம் என, பாகிஸ்தான் அரசு, அமெரிக்காவிடம் கேட்டுக் கொண்டுள்ளது.


கடந்த 2001ம் ஆண்டு, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் தலிபான்கள் ஆட்சியை இழந்து, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தஞ்சம் அடைந்தனர். பாகிஸ்தானில் பலூசிஸ்தான், வாசிரிஸ்தான் உள்ளிட்ட பழங்குடிகள் அதிகம் உள்ள பகுதிகளில் அல் - குவைதா மற்றும் தலிபான்கள் பதுங்கியுள்ளனர். இவர்களை ஒழிப்பதற்காக, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள், ஆளில்லாத விமானம் மூலம் குண்டு வீசித் தாக்குதலை நடத்திவருகிறது. இது வரை 50 முறை இந்த விமானம் மூலம் நடந்த தாக்குதலில், 415 பேர் பலியாகியுள்ளனர்.


தலிபான்களையும், அல் - குவைதாவினரையும் ஒடுக்க, அமெரிக்கா கூடுதலாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்த படைகள் ஆப்கன் வந்த பிறகு பாக்., எல்லையில் ஆளில்லாத விமானம் மூலமான தாக்குதல் அதிகரிக்கும் என, பாகிஸ்தான் அச்சம் தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் ஆளில்லாத விமானத் தாக்குதலால், அப்பாவி மக்களும் பாதிப்பதால், இத்தாக்குதலை நிறுத்தும் படி, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வற்புறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment