Pages

Friday, December 18, 2009

இறைவனுக்கு இணை யார் ?

கடவுளின் கட்டளைகளை செயல்படுத்துவது மற்றும் அவரால் படைக்கப் பட்ட மனிதர்களை வழிநடத்தி செல்வது ஆகிய பணிகளை வானதூதர்கள் செய்து வருகின்றனர். நம் ஒவ்வொருவருக்கும் ஒரு காவல் தூதரை கடவுள் நியமித்துள்ளார். இந்தகாவல் தூதர், யாரை பாதுகாக்கும் பொறுப்பினை ஏற்றுள் ளாரோ அவரின் வாழ்நாள் இறுதிவரை அவருடனிருக்கிறார் என பைபிளில் கூறப் பட்டுள்ளது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள பங்குகள், இறை இல்லங்கள், அந்த இல்லங்களின் சார்பில் நடத்தப்படும் நிறுவனங்கள், மறைமாவட்டங்கள் அனைத் தும் தங்களுக்கென்று ஒரு காவல்தூதரை பாதுகாவலராக கொண்டுள்ளன. வானதூதர்களில் முதன்மையானவர் களாக புனித மிக்கேல், கபிரியேல், ரபேல் ஆகியோர் கருதப்படுகின்றனர்.


மிக்கேல் என்றால் "இறைவனுக்கு இணை யார்"? என்று பொருள். திருச்சபையின் பாதுகாவலராக நியமிக்கப் பட்டுள்ள மிக்கேல், எதிர்பாராமல் ஏற்படும் அழிவுகளை தடுத்து நிறுத்தும் அரணாக உள்ளார். "இறைவனின் பலம்' என்ற பொருளில் அழைக்கப்படும் கபிரியேல், கடவுளின் வல்லமை, மகிமையை வெளிப்படுத்தும் பணிகளை செய்து வருகிறார். இயேசுவின் வருகையை கபிரியேல்தான் தீர்க்கதரிசிகளுக்கு முன்னறிவித்ததோடு, அவர் பிறந்தஉடன் இடையர்களுக்கும் தெரிவித் தார். கடவு ளின் விருப்பத்திற் கேற்ப மனிதர்களை குணப்படுத்தும் பணிகளை செய்பவர் ரபேல்.டஸ்கனி நாட்டில் பிறந்த சிங்கராயர் என்பவர் இறைப் பற்று மிக்கவர். சாதாரண திருத்தொண்டராக தம் பணியை துவக்கி பிற்காலத்தில் திருச்சபையின் தலைவராக பொறுப் பேற்றார். பிரான்ஸ் நாட்டின் பேரரசரான வலந்தீனியனை தனியாக சந்தித்து பேசி, திருச்சபையின் தலைவர் போப் என்பதை அங்கீகரிக்கச் செய்தார். இவரது காலத்தில் இத்தாலி மற்றும் ரோமை வீழ்த்துவதற்காக அற்றிலா என்பவரின் தலைமையில் எதிரிகள், ஏழு லட்சம் படைவீரர்களை திரட்டி வந்து போருக்கு தயார்நிலையில் நின்றனர். இதை கேள்விப்பட்ட சிங்கராயர், போப்பிற்குரிய பிரத்யேக ஆடைகள் மற்றும் தொப்பியை அணிந்து கொண்டு தனியாளாக சென்று அற்றிலாவை சந்தித்து பேசினார்.


இவரது போதனையால் மனம்மாறிய அற்றிலா, போரினை கைவிட்டு தனது நாட்டிற்கு படைவீரர்களுடன் திரும்பிச் சென்றார். ஒருமுறை, திருச்சபை பணிகள் குறித்து தனது சகாக்களுடன் விவாதித்துக் கொண்டிருந்த சிங்கராயர், திடீர் என்று பேச்சு மூச்சின்றி கீழே விழுந்தார். அவர் இறந்து விட்டதாக நினைத்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரத்திற்கு பின்னர் கண்விழித்த சிங்கராயர், அங்கிருந்தவர்களிடம், ""நான் மயக்கத்தில் இருந்தபோது வருங்காலத்தில் திருச்சபைக்கு வரஇருந்த சோதனைகளை கடவுள் எனக்கு சுட்டிக்காட்டினார். திருச் சபை அழிந்து விடுமோ என்று நான் அஞ்சி நடுங்கினேன். அப்போது திடீரென்று அங்கு தோன்றிய புனித மிக்கேல் அதிதூதர், தனது பலத்தால் எதிரிகளை விரட்டியடித்து திருச்சபையை காத்தார். அதன் பின்னர் எனக்கு சுயநினைவு திரும்பியது,'' என்றார்.


இதையடுத்து அதே இடத்தில் முழந் தாளிட்ட சிங்கராயர் அழகிய ஜெபம் ஒன்றை எழுதினார். "அதிதூதரான புனித மிக்கேலே' என்று தொடங்கும் அந்த ஜெபத்தை திருப்பலிக்கு பின்னர் அனைவரும் தவறாமல் ஜெபிக்க வேண்டுமென்று கட்டளையிட்டார். ""மனிதர்களான நாம் அனைவரும் பலவீனமான சிருஷ்டிகள். நாம் நடக்க வேண்டிய பாதையோ நீண்டது. கடினமானது. எனினும், நாம் பயப்படத்தேவையில்லை. மிகுந்த பிரமாணிக்கமுள்ள, விவேகம் நிறைந்த, வல்லமை கொண்ட காவல் தூதர்களை நம்மை வழிநடத்த விட்டுவிடுவோமேயானால், நாம் அச்சமின்றி வாழலாம்,'' என்று பைபிளை மொழி பெயர்த்தவரும், ஆராய்ச்சியாளருமான புனித எரோணிமுஸ் தெரிவித்துள்ளார். நம் காவல் தூதர்கள் நமக்கு துணைபுரியட்டும்.

No comments:

Post a Comment